ஓட்டு போட்ட பெண் கொலை - காவல்துறை அறிக்கை

by Staff / 24-04-2024 05:19:18pm
ஓட்டு போட்ட பெண் கொலை - காவல்துறை அறிக்கை

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்த கோமதி, தேர்தலில் குறிப்பிட்ட கட்சிக்கு ஓட்டு போட்டதாக வெளிப்படையாக சொன்னதால் படுகொலை செய்யப்பட்டார் என தகவல் வெளியானது. ஆனால் 2021ல் ஏற்பட்ட தகராறு தொடர்பாகவே கோமதியின் மரணம் நடந்துள்ளது, வேறு எந்த காரணமும் இல்லை என அவரின் குடும்பத்தினர் விளக்கியுள்ளனர். இந்த வழக்கில் கைதானவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வரும் நிலையில், மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

 

Tags :

Share via