கடன் தொல்லையால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

by Staff / 24-04-2024 04:49:06pm
கடன் தொல்லையால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அமீர்பாளையத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (45), இவர் கட்டிட தொழிலாளி, இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. அதனால் பல இடங்களில் கடனாக பணம் வாங்கியுள்ளார்.அதை திரும்ப கொடுக்க முடியாததால் கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு தொந்தரவு கொடுத்ததால் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து மனைவி விமலா கொடுத்த புகாரில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

Tags :

Share via