தோரணமலையில் பஞ்சபூதங்களுக்கான சிறப்பு பூஜை மற்றும் உறுதிமொழி ஏற்பு.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே அமைந்துள்ளது தோரணமலை ஸ்ரீ முருகன் கோவில் இந்த கோவில் ஆனது புராண சிறப்பும் வரலாற்றுச் சிறப்பும் அகஸ்தியர் மற்றும் தேரையர் வழிபட்ட பெருமை உடைய இக்கோவிலில் இன்று பஞ்சபூதங்களை போற்றும் வண்ணம் சிறப்பு பூஜை நடைபெற்றது. காலையில் விநாயகர் கோவில் கணபதி பூஜை உடன் பூஜை துவங்கியது பின்பு அரசமரம் வேப்பமரம் இணைந்துள்ள இடத்தில் விருச்சராஜ பூஜை நடைபெற்றது.அடுத்ததாக சப்த கன்னியர்களுக்கும் சுனைக்கும் சிறப்பு பூஜை நடைபெற்றது பின்பு 27 நட்சத்திரம் மரங்களுக்கான சிறப்பு பூஜை நடைபெற்ற பின்பு
பஞ்சபூதங்களை போற்றும் வண்ணம் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பஞ்சபூதங்களை போற்றுவோம் பஞ்சபூதங்களை காப்போம் அப்போதுதான் பஞ்சபூதம் நம்மை காக்கும் என கலந்து கொண்ட அனைவரும் உறுதிமொழி எடுத்தனர்.கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. காலை மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை தோரணமலை பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்
Tags : தோரணமலையில் பஞ்சபூதங்களுக்கான சிறப்பு பூஜை மற்றும் உறுதிமொழி ஏற்பு.