திருமழிசை ஆழ்வார் மங்களாசாசனம் செய்த வந்தவாசி இளங்காடு பெருமாள் கோவில்

இந்தியாவில் உள்ள அனைத்து கோவில்களும் ஒரே அமைப்பில் அமைந்துள்ளன. கோவில் பொதுவாக பிரார்த்தனைத் தலமாகும். தியானம் மற்றும் வழிபாடு உள்ளிட்ட மதம் அல்லது ஆன்மீக நடவடிக்கைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அமைப்பாக இருக்கிறது.
இந்த கோவில்கள் அமைதியையும் அன்பையும் வழிநடத்தும் என்று கருதப்படுகிறது. பொதுவாக கோயிலுக்கு செல்பவர்கள் தங்களுடைய மன அமைதிக்கும் குடும்ப நலனுக்காகவும் அதே சமயத்தில் அவர்கள் வாழ்கின்ற இடத்திலும் அதே அமைதியும் வேண்டும் என்று விரும்பி தான் அந்த கோயிலுக்குள் செல்கிறார்கள். இதுவே கோயில்களுக்கு செல்வதன் முக்கியமான அடிப்படை காரணமாக இருக்கிறது.
காஞ்சிபுரி மண்டலம் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த வந்தவாசியிலிருந்து 5 மைல் தூரத்தில் இளங்காடு என்னும் ஓர் அழகிய சிற்றூர் உள்ளது. அங்கு பெரும்பகுதி மக்கள் விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றனர். மேற்படி ஊரில் பூமிநீளா சமேத வைகுண்டவாச பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோயில் ஒரு காலத்தில் சேத்திர விசேஷமாக இருந்திருக்க வேண்டும். இந்த கோயில் சோழ அரசர் காலத்திலும் மற்றும் பல்லவ அரசர் காலத்திலும் மிகப்பெரியதாக அமைக்கப்பட்டிருந்தாக தெரியவருகிறது. அதற்குமுன்பே'இந்தப் பெருமாள் கோவில் இருந்திருக்கிறது. சுமார் 3000 வருஷமாக தொடர்ந்து திருவாராதனம் நடைபெற்று வருவதாக கர்ண பரம்பாரை செய்தி ஒன்று தெரிவிக்கிறது.
'இந்த கோவிலில் வீற்றிருக்கும் பெருமாள் இருந்த நிலையில் பூமிநீளா சமேதராய் 7 12 அடி உயரத்தில் மிகவும் ஆச்சர்யமான திருமுக மண்டலத்துடன் சேவை சாதிக்கிறார். இந்தப் பெருமாளை சமணம், சாக்கியம் மற்றும் சைவ மதங்களை முதலில் தழுவி கடைசியாக வைஷ்ணவ மதத்தை தேர்வு செய்து விஷ்ணுவே மோட்சத்தை தருபவர் என்பதை முற்றிலுமாக உணர்ந்து அதையே உலகம் எங்கும் பறைசாற்றிய சித்தரான திருமழிசை ஆழ்வார் இந்த பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளது மிகவும் சிறப்பான விஷயமாகும். இந்த ஆழ்வார் சைவ மதத்தை தழுவியிருந்து போது இந்த கோவிலின் அருகில் அமைந்திருந்த சிவன் கோவிலுக்கு சேவிக்க வருகை தந்துள்ளார் இந்த பெருமானையும் மங்களாசாசனம் செய்துள்ளார். இதைத் தவிர அகோபில மடம், ஏழாவது பட்டம் ஜீயரான சீவண் சடகோப யதீந்த்ர மஹாதேசிகன் இந்த ஊரில்தான் பிறந்தது இந்த பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளார் என்பது பெருமைக்குரிய விஷயமாகும்.
செஞ்சி ராஜகுருவான திருமலை நல்லான் சக்கரவர்த்தி சேசாத்ரியாச்சார்யா என்னும் சுவாமி இந்த ஊரில் செஞ்சியிலிருந்து குடிவந்து அப்போதிருந்த சமணர்கள் தெருக்களை பின்னால் தள்ளி ௮க்ரஹாரம் அமைத்து, செஞ்சியிலிருந்து தமது வாரிசுகளை குடிவைத்துள்ளார். இவர் பிறந்தது கி.பி. 1315 ம் ஆண்டாகும். அப்போதிருந்த அரசர் இந்த வைகுண்டவாச பெருமாள் கோவில் தர்மகர்த்தம், முதல் மரியாதை முதலியவைகளை இவரிடம் ஒப்படைத்துள்ளார். (இன்றுவரை அந்த பரம்பரைச் சேர்ந்த வம்சாவழியினர் தொடர்ந்து நீர்வாசம் செய்து வருகின்றனர். ஒரு காலத்தில் இந்த ஊர் அக்ரஹாரத்தில் பெரிய மகான்கள்
வாழ்ந்திருந்தனர். எப்போதும் வேத கோஷங்களுடனும் யாக யக்யங்கள் செய்தும் வசித்து வந்திருக்கின்றனர்.
இந்த ஊர் ஒரு பழமையான, திருக்கோவில் பிரசித்திபெற்ற நகரமாக இருந்திருக்கிறது. சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் வெங்குணம் கோட்டத்து பொன்னூர் நாட்டு இளங்காடாம் அழகிய சோழநல்லூர் எனக் குறிப்பிடப்பட்டூள்ளது. இந்த ஊரில் தாலுக்கா அலுவலகமும் சந்தைப்பேட்டைகளும் இருந்ததற்கு அடையாளமாக இன்னமும் கட்டிடகடகால்கள் உள்ளன.
மேலும் மேற்படி செஞ்சி திருமறைநல்லான் சக்கரவர்த்தி சேசத்திரி யாச்சார்யர் கிருஷ்ணன்குட்டை என்னுமிடத்தில் சத்ரயாகம் செய்துள்ளதற்கு அடையாளமாக அங்கு மண்படம் உள்ளது.
மேலும் மேற்படி கூட்டஸ்தரான செ.தி.ந.ச. சுவாமி ஒருகாலத்தில் யசனூர் என்னும் ஒரு கிராமத்திற்கு தமது சிஷ்யர்களைக் காண சென்ற போது இரவு ஒரு வீட்டின் திண்ணையில் படுத்திருந்ததாகவும் அங்கு ஒரு பூதம் இரவு வந்து இவரை மிரட்டியதாகவும் உடனே தமது மூன்றாவது யக்ஞோபவிதத்தை கழற்றி அதன்மீது வீசி தமது மந்த்ர சக்தியால் அடக்கி தமக்கு வாகனமாக்கி அதைக் கொண்டு தினசரி செஞ்சி அரங்கநாத பெருமாளையும் காஞ்சி வரதராஜ பெருமாளையும் சேவித்துவிட்டு இளங்காட்டிற்கு திரும்பியதாகவும் சிலகாலம் கழித்து அந்தப் பூதத்தை அடக்கி வீட்டுவேலை செய்ய வைத்து கொண்டதாகவும் பெரியோர் கூறுவர். அதன் அடையாளமாக அந்த பூதம் நெல் குத்திய உரல் அக்ரஹார வீட்டின் பின்புறத்தில் இன்றளவும் உள்ளதை அறியலாம். இந்த திருக்கோவில் பெருமாளுக்கு 3000 ஆண்டூகளாக திருவாராதனம் விடுபடாமல் வைகாணஸ ஆகமமுறைப்படி பூசைகள் நடைபெற்று வருவது மிகவும் சிறப்பு.
சமீபகாலம் வரை பார்வேட்டை தேசிகன் சாற்றுமுறை நவராத்ரி உத்சவம், வைகுண்ட ஏகாதசி, தனூர் மாசம் கிருஷ்ணஜெயந்தி ஆகிய உத்சவங்கள் நடந்து வந்தன. தற்போது அக்ரஹாரவாசிகள் ஒருவரும் அந்த ஊரில் இல்லாததாலும் கோவிலுக்கு வருமானமே இல்லாததாலும் திருவிழாக்கள் நின்றுவிட்டன. தினசரி திருவாராதனம் மட்டும் அக்ரஹாரவாசிகள் உதவியோடு விடுபடாமல் ஒருவேளை நடைபெற்று வருகிறது.
பெரியவர்கள் காலத்திலேயே இந்த பெருமாள் கோவில் கர்ப்பகிரஹம், அர்த்தமண்டபம், மகாமண்டபம் முதலியான முற்றிலுமாக இடிந்துவிட்டநிலையில் அவர்களே பெருமாளை முன்மண்டபத்தில் தடுப்புசுவர் ஏற்படுத்தி, பிரதிஷ்டை செய்துள்ளனர். தற்போது அந்த மண்டபம் மிகவும் சிதிலமாகிவிட்டது. இதை உடனடியாக சீர்செய்யாவிட்டால், பெருமாள் விக்ரகத்திற்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.
'இந்தப் பெருமாளை ஒருமுறையாவது பக்தகோடிகள் இந்த கிராமத்திற்கு சென்று சேவித்துவிட்டு வந்தால் தாங்கள் நினைத்திருக்கும் அனைத்து காரியங்களும் சித்தியாகும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
எனவே இதைக் காணும் பக்தகோடிகள் உடனடியாக இந்தப் பெருமாளைசேவித்து அருள்பெற அன்புடன் வேண்டுகிறோம். பெருமாள் விக்ரகம் மிகவும் வேலைப்பாடுகள் நிறைந்ததாய் அமைந்திருப்பது சிறப்பான அம்சமாகும்.இந்தக் கோவில் வந்தவாசியிலிருந்து திண்டிவனம் செல்லும் சாலையில் 5 கீ.மீ. தூரத்தில் மெயின் ரோட்டிலிருந்து பொன்னூர் இளங்காடு செல்லும் பாதையில் 2 கீ.மீ. தூரத்தில் உள்ளது.
Tags :