காரும் - லாரியும் நேருக்கு நேர் மோதி .. 4 பேர் பலி

காரும் - லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டு ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை பாந்த்ராவில் SUV கார் ஒன்று லாரியுடன் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஓட்டுநர் உட்பட 4 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இவ்விபத்தில் நாக்பூரைச் சேர்ந்த சைலேந்திரா, சைலேஷ், வினோத், அசோக் ஆகியோர் உயிரிழந்தது தெரியவந்தது.
Tags :