அக்டோபர் 27-ஆம் தேதிக்குள் இது புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

by Admin / 24-10-2025 05:26:06pm
 அக்டோபர் 27-ஆம் தேதிக்குள் இது புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

வங்கக் கடலில் 'மோந்தா' என்ற புயல் உருவாகக்கூடும் என்றும் அக்டோபர் 27-ஆம் தேதிக்குள் இது புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது.என்றும் இதனால், தமிழ்நாட்டில் கனமழை பெய்யக்கூடும்.என்றும்வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அக்டோபர் 25-ம் தேதி தாழ்வு மண்டலமாகவும், அக்டோபர் 27-ம் தேதி புயலாகவும் வலுப்பெறக்கூடும்..
புயல் காரணமாக, அடுத்த சில நாட்களில் தமிழகம், ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோரப் பகுதிகளில் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
வானிலை ஆய்வு மையம், கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

Tags :

Share via