விஜய்- பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பனையூரில் சந்திக்க உள்ளதாக தகவல்
கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த கோர சம்பவத்தை தொடர்ந்து விஜய் பாதுகாப்பு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க முடியாமல், உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு வங்கி வழியாக அவர் அறிவித்த 20 லட்சம் ரூபாயை செலுத்தினார். இந்நிலையில், அவர் கரூருக்கு நேரில் செல்வதாக இருந்த திட்டம் கைவிடப்பட்டு ,பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..
Tags :



















