திருவள்ளூரில் நடந்த ரயில் விபத்து ஒரு சிறிய விபத்து: எல்.முருகன்

by Staff / 12-10-2024 04:19:04pm
திருவள்ளூரில் நடந்த ரயில் விபத்து ஒரு சிறிய விபத்து: எல்.முருகன்

திருவள்ளூரில் நடந்த ரயில் விபத்து ஒரு சிறிய விபத்துதான் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எல்.முருகன், "கவரைப்பேட்டை ரயில் விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவில்தான் முழுமையான விவரம் தெரியவரும் கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே துறை வேகமான வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்தியாவில் மக்கள் இன்னும் செல்லாத இடங்களுக்குகூட ரயில் செல்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories