கணினி மொழி -கோடிங் உருவாக்கப்பட வேண்டும். தமிழை பேச்சளவில் வளர்ப்பதாகச் சொல்லாமல் செயலாக்க மொழியாக மாற்ற வேண்டும
தமிழ் ஏன் தொன்மையான மொழியாகயிருந்தும் உலகளாவிய மொழியாக வடிவெடுக்கவில்லை என்பதை ஒவ்வொரு மொழிப் பற்றாளர்களும் கவனத்தில் கொள்ளவேண்டும். புலம் பெயர் தமிழர்களால் இலங்கை,சிங்கப்பூர்,மலேசியா போன்ற சிறிய நாடுகளில் ஆட்சி மொழியாக அரங்கேறி இருக்கிறது.இது தவிர்த்து பல நாட்டு பல்கலைக்கழகங்களில்இருக்கைகள் அமைக்கப்பட்டு ,விரும்பிய வெளிநாடு வாழ் மக்கள் படிக்க ஒரு படிப்பாக உள்ளது.ஏன் தமிழைப்படிக்க வைக்க ஓர் உலக .வலிமையான பொருளாதாரம் நிரந்த வைப்பு தொகை தமிழ் சார் அரசாங்கதின் வாயிலாக உருவாக்க வேண்டும்.இலக்கிய மொழி தானே என்று நினைக்காமல் வாழ்க்கையின் இலக்கு மொழியாக மாற்ற வேண்டும்.புதிது புதிதான மென் பொருட்கள் உருவாக்கதேவையான கணினி மொழி -கோடிங் உருவாக்கப்பட வேண்டும்.பொறியியல் பாடங்கள்,வேதியியல்,இயற்பியல்,கணித பாடங்கள் பள்ளிகளோடு நின்று விடுவதை மாற்றி தமிழை பேச்சளவில் வளர்ப்பதாகச் சொல்லாமல் செயலாக்க மொழியாக மாற்ற வேண்டும. மென் பொருளில் தமிழர்கள்தான் சாதித்துக்கொண்டிருக்கிறார்கள்.அவர்களை,அவர்களுடைய நிறுவனத்தை அழைத்து தமிழை புதிய நிலைக்கு எடுத்துச்செல்ல ஆலோசனை பெறலாம்.அத்துடன் ஒவ்வொரு நிறுவனமும் புதிய கணினி மொழி வளர்ச்சிக்கு துணை நின்றால்,தமிழ் நாட்டிலுள்ள அந் நிறுவனங்களுக்கு அப்புதிய மொழி வடிவமைக்கும் காலம் வரை முழுமையான வரி விலக்கை அளிக்கலாம்.அது சாத்தியமில்லை யொனில் பாதியாக கூட வரி பெறலாம் அரசு மட்டுமே இதைச் செய்ய வேண்டும் என்று நினைப்பது தவறு.ஒட்டுமொத்த ஏழரை-எட்டுக்கோடி மக்களையும் அரசு பேண வேண்டும்.அதனால், மொழி வளர்ச்சி,பாதுகாப்பு என்று மட்டும் பேசாமல் பல்துறையில் விற்பன்னர்கள்,தொழிலதிபர்களிடம் அரசு ஒத்துழைப்பு கேட்டு தமிழை நவீன கணினி மொழியாக மாற்றினால் ,அது உலக மொழிகளில் தொன்மையான நவீன மொழி என்று கற்க வருவர்.வேலை வாய்ப்பு கிடைக்கும் .தமிழ் தொன்மையான மொழி என்றாலும் காலந்தோறும் அது பல இலக்கிய ஆளுமைகளின் படைப்புகளால் செழித்துக்கொணிடுதான் வருகிறது.இருப்பினும் இலக்கிய மொழியாக அதன் எல்லை சுருங்கிவிடக்கூடாது.தமிழ் போல் தொன்மையான சித்திர எழத்துக்கள் கொண்ட சீன மொழியில் கணினி மொழி கோடிங் உள்ளதே.தமிழால் வாழ்ந்தோர் தமிழை வாழ வைக்க முயல வேண்டும்.
Tags :