தூய்மை பணியாளருக்கும் முழு உடல் பரிசோதனை.

by Staff / 19-04-2023 01:46:52pm
தூய்மை பணியாளருக்கும் முழு உடல் பரிசோதனை.

சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை விவாதத்திற்கு பின்பு மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் மா. சுப்பிரமணியன.அப்போது, நடப்போம் நலம் பெறுவோம் எனும் நோக்கில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 8 கிலோமீட்டர் தூரம் கொண்ட நடைபாதைகள் கண்டறியப்பட்டு பிரதி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று நல்வாழ்வு பெறுவதற்கான நடைப்பயிற்சி ஊக்குவிக்கும் வகையில் நடைபாதைகள் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து ருவாக்கப்படும்.தமிழ்நாட்டில் உள்ள நகராட்சி மற்றும் மாநகராட்சியில் பணிபுரியும் நகர்ப்புற தூய்மை பணியாளருக்கான சிறப்பு முகாம்கள் நகர்புற நலவாழ்வு மையங்களில் நடத்தப்படுவதுடன், ஒவ்வொரு தூய்மை பணியாளருக்கும் வருடத்திற்கு ஒருமுறை அரசு மருத்துவமனைகளில் முழு உடல் பரிசோதனை நடத்தப்படும். சேலம், தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மூன்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உடல் பரிசோதனை மையம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.

 

Tags :

Share via