காவிரிநீர்பிடிப்பு பகுதிகளில் மழை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107 அடியாக உயர்ந்தது.

by Editor / 11-05-2022 09:11:50am
காவிரிநீர்பிடிப்பு பகுதிகளில் மழை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107 அடியாக உயர்ந்தது.

காவிரிநீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சற்றுக் கூடுதலாக வந்தது. இந்த நிலையில் இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 107 அடியாக உயர்ந்தது.கடந்த ஐந்தாம் தேதி முதல் நேற்று (10ம் தேதி) வரை மேட்டூர் அணை நீர்மட்டம் 106 அடியாக இருந்தது.
 கடந்த மாதம் 21ஆம் தேதி முதல் இந்த மாதம் 4-ந்தேதி வரை மேட்டூர் அணை நீர்மட்டம் 105 அடியாக இருந்தது.மேட்டூர் அணைக்கு நேற்று 3 ஆயிரத்து 135கன அடி தண்ணீர் வந்தது,மழையின் தாக்கம் அதிகமுள்ளதால் இன்று காலை 3 ஆயிரத்து 773 கனஅடி தண்ணீர் வந்துகொண்டுஇருப்பாதால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது..தற்போது அணையின் கொள்ளளவு 74.29டிஎம்சி ஆகும்.அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1500கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

 

Tags : The water level of the Mettur Dam rose to 107 feet due to rains in the Cauvery catchment areas.

Share via