மனித நேயமிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

by Editor / 19-07-2021 04:28:35pm
மனித நேயமிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

 

தென்காசி மாவட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அலுவலகத்தில் தினமும் பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை நேரில் சந்தித்து புகார் அளிக்க வருவது வழக்கம்.திங்கள்கிழமை வழக்கம் போல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் புகார் மனுக்களை விசாரணை செய்து கொண்டிருக்கும் வேளையில், மாற்றுத்திறனாளி நபர் ஒருவர் புகார் அளிக்க வந்திருப்பதை அறிந்து உடனடியாக தனது அறையிலிருந்து வெளியே வந்து மாற்றுத்திறனாளி நபரிடம் புகார் மனுவினை பெற்று தங்களின் புகார் மனு மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததோடு முக கவசமும் வழங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் இந்த மனிதநேயமிக்க செயலுக்கு புகார் அளிக்க வந்த பொதுமக்கள் தங்களின் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

 

Tags :

Share via