ஆபத்தில் முடியும் ஆன்லைன் ரம்மி கடன் தொல்லைக்கு ஆளாகி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட காவலர்

by Staff / 09-06-2022 04:42:33pm
ஆபத்தில் முடியும் ஆன்லைன் ரம்மி கடன் தொல்லைக்கு ஆளாகி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட காவலர்

திருநெல்வேலி மாவட்டம் பழவூர்  அருகே  ஆன்லைன் ரம்மி விளையாட்டில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்தது கடன் தொல்லைக்குஆளாகிய  காவலர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.மாடன் பிள்ளை தர்ம  பகுதியைச் சேர்ந்த ரவி செல்வன் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஆர்வம் மிகுந்த அவர் சரிவர பணிக்கு செல்லாமல் அக்கம்பக்கத்தினரிடம் லட்சக்கணக்கில் கடன் பெற்று விளையாட்டுக்கு அடிமையானதாக  கூறப்படுகிறது இந்த நிலையில் பணத்தை இழந்த விரக்தியில் மதுவில் விஷம் கலந்து குடித்துள்ளார். தோட்டதில்   மயங்கிய நிலையில் கிடந்த அவரை மீட்டு உறவினர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

 

Tags :

Share via