தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு?

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில், "தனியார் பள்ளிகளில் 75% மேல் கட்டணம் வாங்குவது தவறு. அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். டெட் எக்ஸாம் வராமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்,
அந்த தேர்வு வந்த காரணத்தினால் பல்வேறு குழப்பங்கள் வருகிறது. அதற்கு அடுத்ததாக காம்பெடட்டிவ் எக்ஸாம் ஒன்று நடைபெறும். இதில் நிறைய முரண்பாடுகள் உள்ளது. இதனை சீர் செய்ய வேண்டும். இதை ஒரே நடைமுறையில் கொண்டுவர கோரிக்கையாக மாண்புமிகு முதலமைச்சரிடம் நாங்கள் வைத்துள்ளோம்.
கல்வித்துறையில் ஒரு ஆசிரியர் வேலைக்கு வர வேண்டுமென்றால், இந்த ஒரே ஒரு நடைமுறை மட்டும்தான் என்று கொண்டு வருவதற்கு முயற்சி செய்து வருகிறோம்.
அதிமுக ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு 'டேப்' வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது குறித்து இன்னும் ஆலோசனை செய்யப்படவில்லை.
சாதாரணமாக ஊரடங்கு ஆலோசனையின் போது எடுக்கக்கூடிய முடிவுகள், கலந்துரையாடல்களை விட, பள்ளி திறப்பதற்கு முன்பாக தமிழக முதலமைச்சர் நடத்தும் ஆலோசனை பலமடங்கு இருக்கும். தற்போது 9ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. இதுகுறித்த அறிவிப்பை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பார்"
Tags :