போராட்டத்திற்கு தயாராகும் 20 ஆயிரம் விவசாயிகள்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லிக்கு பேரணியாக செல்ல விவசாயிகள் தயாராகி வருகின்றனர். சுமார் 20,000 விவசாயிகள் 2,000 டிராக்டர்களில் பயணம் செய்து செவ்வாய்க்கிழமை டெல்லிக்குள் நுழைவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதிலும் இருந்து விவசாயிகள் டெல்லி வர தயாராகி வருகின்றனர். டெல்லியில் பிரதமர் மோடியின் வீடு முற்றுகையிடப்பட வாய்ப்புகள் உள்ளதால் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
Tags :