பாஜகவுடன் கூட்டணி இல்லை - பழனிசாமி திட்டவட்டம்

மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக உடன் கூட்டணி இல்லை என்று ஏற்கெனவே அறிவித்து விட்டோம். பாஜகவுடன் கூட்டணி இருக்கிறதா? என்று இனியும் கேள்வி கேட்க வேண்டாம் என்று அவர் தெரிவித்தார். மேலும், அதிமுக கூட்டணி சரியான நேரத்தில் அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
Tags :