படிப்படியாக குறைந்துவரும் மழை..வெள்ள நீர் வடிய தொடங்கியது.

by Editor / 05-12-2023 08:16:30am
படிப்படியாக குறைந்துவரும் மழை..வெள்ள நீர் வடிய தொடங்கியது.

சென்னையை புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் ஆந்திர கடலோர பகுதிக்கு நகர்ந்ததால் மழை குறைந்து வருகிறது. மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் மழை நீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பல இடங்களில் சாலைகளில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கி இருப்பதால் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மாநகர பேருந்துகள், புறநகர் மின்சார ரயில்கள் இயக்காத நிலையில், மெட்ரோ ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றது. மழை நின்றுள்ளதால் ஆங்காங்கே வெள்ள நீர் வடிய தொடங்கியுள்ளது.வெயிலின் தாக்கம் இலேசாகத்தொடங்கியுள்ளது.

 

Tags : படிப்படியாக குறைந்துவரும் மழை..வெள்ள நீர் வடிய தொடங்கியது.

Share via

More stories