அம்மா வழியில் மக்கள் பயணம்-பயணத்தை தொடங்கிய சசிகலா.

தென்காசியில் காசிமேஜர்புரம் பகுதியில் வி.கே சசிகலா தனது அம்மா வழியில் மக்கள் பயணம் என்கிற சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தனது ஆதரவாளர்களை சந்திக்கும் விதமாக அம்மா வழியில் மக்கள் பயணம் என்கிற சுற்றுப்பயணத்தை தென்காசியில் இருந்து வி கே சசிகலா தொடங்கியுள்ள நிலையில்.
தென்காசி மாவட்டம் காசிமேஜர்புரத்தில் சுற்றுப்பயணம் தொடங்கிய நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட நிலையில் ஆதரவாளர்களால் வி கே சசிகலா விற்கு ஜேசிபி எந்திரம் மூலம் ராட்சத மாலை அணிவிக்கப்பட்டு வீரவாள் பரிசாக அளிக்கப்பட்டது.
தன தொடர்ச்சியாக இலஞ்சியில் திரண்டுநின்ற மக்களிடம் தனது கருத்துக்களை பதிவு செய்தார்.இதனைத்தொடர்ந்து தென்காசி புதியபெருந்துணியம் முன்பே பேசிய அவர் திமுகவை கடுமையாக சாடி பேசினார்.காசிமேஜர்புரத்திலிருந்து பல்வேறுபகுதிகளில் அவ்ருக்கு பொதுமக்களால்,அவரது ஆதரவாளர்களாலும் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.
இந்தநிலையில் இந்தநிகழ்வை படபிடிக்க செய்தியாளர்கள் திரண்டுவந்து நிலையில் காசிமேஜர்புரத்தில் கூட்ட நெரிசலில் மர்ம நபர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் மற்றும் செய்தியாளர்களிடம் இருந்து கைபேசி பர்ஸ் பணம் மற்றும் வெள்ளி நகைகள் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கூட்டத்தில் பிக்பாக்கெட் அடித்தால் மர்ம நபர் குறித்து குற்றாலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags : அம்மா வழியில் மக்கள் பயணம்-பயணத்தை தொடங்கிய சசிகலா.