தனது சாதனையை தானே முறியடித்த பிரதமர்

by Staff / 15-08-2024 01:55:21pm
தனது சாதனையை தானே முறியடித்த பிரதமர்

நாடு தனது 78வது சுதந்திர தினத்தை இன்று ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடுகிறது. சுதந்திர தின உரைகளின் நீளமான தனது சாதனையை பிரதமர் மோடி முறியடித்துள்ளார். 2016ல் 96 நிமிடம் பேசிய அவர், இன்று 98 நிமிடங்களில் அதை கடந்துள்ளார். பிரதமராக அவர் ஆற்றிய உரைகளின் சராசரி நீளம் 82 நிமிடங்கள். வேறு எந்த பிரதமருக்கும் இந்த சராசரி இல்லை. 2017 இல் மிகக் குறைவாக 56 நிமிடங்கள் பேசப்பட்டது. கடந்த ஆண்டு 90 நிமிட உரை நிகழ்த்தினார்.

 

Tags :

Share via