சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்ள தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு தேர்தல் ஆணையம் அனுமதி.
தலைமைச் செயலகத்திற்கு நேரடியாக சென்று சென்னையில் பரப்புரை மேற்கொள்வதற்காக அனுமதி கடிதத்தை தலைமை தேர்தல் ஆணையரிடம் வழங்கினார், தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்.அதனைத் தொடர்ந்து அவருக்கு பெரம்பூர் ,கொளத்தூர், வில்லிவாக்கம் உள்ளிட்ட தொகுதிகளில் பரப்புரை மேற்கொள்வதற்கு அனுமதி அளித்துள்ளது, தேர்தல் ஆணையம்.
சனிக்கிழமை , சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட் நாயக்கை நேரில் சந்தித்து மனு அளித்தார். தனது கட்சியின் தேர்தல் பணிகளுக்கு சில அதிகாரிகள் முட்டுக்கட்டை போடுவதாக புகார் அளித்த அவர் அவர்களை இடமாற்றம் செய்யவும் கோரிக்கை விடுத்தார்.
முதற்கட்டமாக, சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், அண்ணா நகர் மற்றும் விருகம்பாக்கம் ஆகிய ஐந்து தொகுதிகளில் பரப்புரை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது
,பெரம்பூர் தொகுதியில் மார்ச் 30ஆம் தேதி திங்கட்கிழமை அன்று விஜய் தனது புறப்புரையை தொடங்குகிறார், மார்ச் 28 அன்று நடைபெற இருந்த பொதுக்கூட்டத்திற்கு இட நெருக்கடி மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக காவல்துறை அனுமதி மறுத்திருந்தது. தற்பொழுது வழங்கப்பட்டுள்ள அனுமதியின்படி பெரம்பூர் கூட்டத்தில் சுமார் 100 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தொடக்கத்தில் தமிழக வெற்றிக்கழக தரப்பில் 3,000 பேருக்கு அனுமதிகோரப்பட்டிருந்தது.
ஞாயிற்றுக்கிழமை இன்று நுங்கம்பாக்கத்தில் நடைபெறும் விழாவில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வைக்கிறார்.
Tags :



















