ரூ.165 கோடியில் விலங்குகள் நல மருத்துவமனை கட்டிய டாடா தலைவர் ரத்தன் டாடா

by Staff / 08-02-2024 12:29:52pm
ரூ.165 கோடியில் விலங்குகள் நல மருத்துவமனை கட்டிய டாடா தலைவர் ரத்தன் டாடா

டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடாவின் சமீபத்திய கனவு திட்டம் நனவாகியுள்ளது. மும்பை கன்னயாவில் 2.2 ஏக்கரில் ரூ.165 கோடி செலவில் விலங்குகள் நல மருத்துவமனை கட்டியுள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய கால்நடை மருத்துவமனை இதுவாகும். டாடா டிரஸ்ட் சிறிய விலங்குகள் மருத்துவமனை மும்பை மகாலட்சுமியில் அமைந்துள்ளது. நாய்கள், பூனைகள் மற்றும் முயல்கள் போன்ற அனைத்து சிறிய செல்லப்பிராணிகளும் இங்கு 24 மணிநேர அதிநவீன சிகிச்சை வழங்கப்படுகிறது. தான் வளர்த்து வந்த செல்ல நாய்க்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாத வருத்தத்தில், இனி யாருக்கும் அப்படி நடக்கக்கூடாது என்ற எண்ணத்தில் விலங்குகளுக்காக மருத்துவமனை கட்டியுள்ளார் இந்த மாமனிதர்.

 

Tags :

Share via