பாகிஸ்தானில் தேர்தல் வாக்குப்பதிவு
பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும். மொத்தம் 12.85 கோடி வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துவார்கள். நாடு முழுவதும் 90,000 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தேர்தலையொட்டி, 6.5 லட்சம் போலீசார் உடன் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Tags :