ஏடிஎம் கார்டு மூலம் விபத்து காப்பீடு.

by Editor / 17-02-2024 09:50:21am
ஏடிஎம் கார்டு மூலம்  விபத்து காப்பீடு.

நம்மில் பலரும் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் அல்லது விபத்து காப்பீட்டுத் திட்டம் குறித்து கண்டிப்பாகத் தெரிந்து வைத்திருப்போம். அதெல்லாம் நாம் தவணை முறையில் பணம் செலுத்தி நமக்கு விபத்து நேரும்போது அல்லது இறப்பு நிகழும்போது அதன் பலன்களை நாமோ அல்லது நமது குடும்பமோ பெற்றுக் கொள்ளும் வகையிலானது.

ஆனால், நீங்கள் வங்கியின் ஏடிஎம் கார்டு வைத்திருந்தாலே போதும் உங்களுக்கு இந்தக் காப்பீடுகள் கிடைக்கும் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். அதற்கென தனியே கட்டணம் செலுத்த தேவையில்லை. 

டிஜிட்டல் யுகத்தில் பெரும்பாலான பணப் பரிமாற்றம் இணையம் வழியாகவே நடைபெறுகிறது. சாதாரண உள்ளூர் கடைகள் தொடங்கி உலகச் சந்தை வரை டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முக்கியமான அங்கமாக மாறிவிட்டது. அதில் பெரிய பங்கு வகிப்பது டெபிட் கார்டுகள் (Debit Cards) என்றழைக்கப்படும் ஏடிஎம் கார்டுகள் தான்.

இந்தியாவில் மட்டும் வங்கித் துறையில் நூற்றுக்கணக்கான பொதுத் துறை, தனியார் துறை, சர்வதேச வங்கிகள் இயங்கி வருகின்றன. அதைத் தாண்டி குறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களும் வங்கி சார்ந்த அலுவல்களைச் செய்து வருகின்றன.

கடந்த செப்டம்பர் மாத ஆர்பிஐ (RBI) அறிவிப்பின்படி, இந்த வங்கிகளில் 966 மில்லியன் ஏடிஎம் கார்டுகள் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதில், ஒரே நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட அட்டைகளை வைத்திருக்கும் கணக்கும் அடக்கம்.

ஏடிஎம் (டெபிட்) கார்டு உள்ள பொது மற்றும் தனியார் வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு விபத்து காப்பீடு உள்ளது. எஸ்பிஐ கோல்டு (மாஸ்டர்கார்டு/விசா) கார்டில் ரூ.2 லட்சம் வரையிலும், விசா சிக்னேச்சர் கார்டில் ரூ.10 லட்சம் வரையிலும் காப்பீடு பெறலாம். HDFC பிளாட்டினம் டெபிட் கார்டில் ரூ.5 லட்சம் மற்றும் ஐசிஐசிஐ டைட்டானியம் கார்டில் ரூ.10 லட்சம் வரை காப்பீடு கிடைக்கிறது. நபர் இறந்து 3 மாதங்களுக்குள் குடும்ப உறுப்பினர்கள் விண்ணப்பித்தால் காப்பீட்டுத் தொகை கிடைக்கும்.

 

Tags : ஏடிஎம் கார்டு மூலம்

Share via