சாகுபடிக்கு தண்ணீர் தராத கர்நாடகா அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டம் .
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில்கர்நாடகா அரசை கண்டித்து திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது கர்நாடகா அணைகளில் 250 டிஎம்சி தண்ணீர் இருந்தும் தமிழகத்திற்கு டெல்டா மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக ஒரு டி எம் சி கூட தண்ணீர் தராத கர்நாடகா அரசை கண்டித்தும் கர்நாடகா அணையில் இருந்து தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை திறந்து விட மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியும் தமிழக அரசு அனைத்து கட்சிகளும் மற்றும் விவசாய சங்கங்களையும் அழைத்து பேசி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருத்துறைப்பூண்டி இரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது இதில் ஏராளமான விவசாயிகள் விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டனர் பாதுகாப்பு பணியில் திருத்துறைப்பூண்டி டி எஸ் பி பழனிச்சாமி முத்துப்பேட்டை டிஎஸ்பி ராஜா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
Tags : சாகுபடிக்கு தண்ணீர் தராத கர்நாடகா அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டம் .