வால்பாறையில் கனமழை ஆறுகளில் வெள்ள பெருக்கு, பள்ளிகளுக்கு இன்று விடுமுறை 

by Editor / 16-07-2024 11:01:04am
வால்பாறையில் கனமழை ஆறுகளில் வெள்ள பெருக்கு, பள்ளிகளுக்கு இன்று விடுமுறை 

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில நாட்களாக மிக கன மழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு மே மாதம் தொடங்கி மிதமான மழை இருந்து வந்த நிலையில் கடந்த 10நாட்களுக்கு மேலாக அதிகமான மழை பொழிவு வால்பாறை அதன் சுற்று வட்டார எஸ்டேட் பகுதியில் பெய்து வருகிறது இயல்பு வாழ்க்கை பாதிப்பு, வால்பாறையில் நேற்று ஒரே நாளில் 169mm மழை பெய்ததால் நீர்வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது . மேலும் ஆற்றுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு நடுமலை ஆறு வாழைதோட்ட ஆறு கூலங்கள் ஆறு போன்றவற்றில் மழை நீர் அதிகரித்து வருகிறது. அதே போல் பிர்லா பால்ஸ் சின்னகல்லார், கவிஅருவிகளில் நீர் அதிகரித்துள்ளது. சோலையார் அணை ஒரே நாளில் 13அடி உயர்ந்துள்ளது. அதே போல் பொள்ளாச்சி to வால்பாறை 24கொண்டை ஊசி வளைவில் ஏற்பட்ட மண் சரிவால் போக்கு வரத்து பாதிக்கப் பட்டுள்ளது மற்றும் சிறுகுன்றாUD  எஸ்டேட் ஏசையன்  என்பவரது வீட்டின் மீது மரம் விழுந்தது. சம்பவம் அறிந்த வால்பாறை நகராட்சி தலைவர் நேரில் சென்று பார்வையிட்டார்.குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள மரங்களை வெட்டுமாரு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆங்காங்கே பல பகுதியில் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிப்படைந்து.கன மழை அதிகரிப்பால்  வால்பாறை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அளித்துள்ளது. மேலும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் பொது மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

 

Tags : வால்பாறையில் கனமழை ஆறுகளில் வெள்ள பெருக்கு, பள்ளிகளுக்கு இன்று விடுமுறை 

Share via