எடப்பாடி பழனிசாமி வரவேண்டும் என்பது தெய்வத்தின் தீர்ப்பு- திண்டுக்கல் சீனிவாசன்

by Staff / 01-11-2025 03:45:12pm
எடப்பாடி பழனிசாமி வரவேண்டும் என்பது தெய்வத்தின் தீர்ப்பு- திண்டுக்கல் சீனிவாசன்

ஜெயலலிதா இருக்கும்போதே செங்கோட்டையன் முதலமைச்சராக விரும்பியதாகவும், அதனால் அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதாகவும் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கருத்து தெரிவித்தார். மதுரையில் இன்று (நவ., 01) செய்தியாளர்களிடம் பேசிய அவர், எடப்பாடி பழனிசாமியை விட முன்னால் பிறந்ததால் செங்கோட்டையன் மூத்த நிர்வாகியாகி விடுவாரா?செங்கோட்டையன் முன்னால் பிறந்தவர்தான், ஆனால் மற்ற தகுதிகள் அனைத்தும் பழனிசாமிக்கு இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி வரவேண்டும் என்பது தெய்வத்தின் தீர்ப்பு என்று தெரிவித்தார்.

 

Tags : எடப்பாடி பழனிசாமி வரவேண்டும் என்பது தெய்வத்தின் தீர்ப்பு

Share via