மூன்று பாஜக எம்எல்ஏக்கள் ராஜினாமா?

புதுச்சேரி சட்டப்பேரவையின் நியமன எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமா செய்துள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. எம்எல்ஏக்கள் ராமலிங்கம், வெங்கடேசன், அசோக் பாபு ஆகியோர் சபாநாயகரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்ததாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், புதுச்சேரியில் பாஜக அமைச்சர்கள் சிலரை மாற்றவும் கட்சித் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக அமைச்சர் நமச்சிவாயம், பாஜக தலைவர் செல்வகணபதி ஆகியோர் முதல்வர் ரங்கசாமியுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
Tags :