சத்துணவு கூடத்தில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து

by Editor / 27-06-2025 04:12:07pm
சத்துணவு கூடத்தில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து

திண்டுக்கல்: வேடசந்தூர் பாலப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் உணவு சமைப்பதற்காக இன்று (ஜூன் 27) காலை 2 பெண் ஊழியர்கள் சிலிண்டர் அடுப்பை பற்றி வைத்தனர். கேஸ் கசிவு காரணமாக திடீரென தீப்பற்றியதால், அவர்கள் இருவரும் அங்கிருந்த 2 குழந்தைகளுடன் பாதுகாப்பாக தப்பினர். சில நிமிடங்களில் சிலிண்டர் வெடித்து சமையலறை கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து சிதறியது. இதில் பள்ளி கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. மாணவ, மாணவிகள் வருவதற்கு முன்பே விபத்து நடந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

 

Tags :

Share via