விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - வேட்புமனுக்கள் இன்று பரிசீலனை.

விழுப்புரத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் வருகிற ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிட 56 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில், வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று (ஜூன் 24), விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற நாளை மறுநாள் (ஜூன் 26) கடைசி நாளாகும். அன்றைய தினமே வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு, போட்டியிடும் வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியிடப்படுகிறது.
Tags : விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - வேட்புமனுக்கள் இன்று பரிசீலனை