விஜயதாரணி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து சபாநாயகருக்கு கடிதம்.

by Admin / 25-02-2024 12:13:45pm
 விஜயதாரணி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து சபாநாயகருக்கு கடிதம்.

காங்கிரஸ் கட்சி விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜய தரணி நேற்று பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் நட்டா முன்னிலையில் பா.ஜ.கவில் தன்னை இணைத்துக் கொண்டார். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்த விஜயதாரணி காங்கிரஸ் கட்சிக்குள் அவருக்கு சரியான அங்கீகாரம் இல்லாததால் கட்சியை விட்டு விலக உள்ளதாக  செய்தி பரவி வந்த நிலையில்  மோடி சிறந்த ஆட்சியை வழங்கி வருகிற காரணத்தினால் தான் பாரதியஜனதா கட்சியில் சேர்வதாக அறிவித்தார்.. இந்நிலையில், அவர் தன்னுடைய விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து சபாநாயகருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்..சபாநாயகர் நடவடிக்கைக்கு பின்பு  விளவங்கோடுசட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்படும்.

 விஜயதாரணி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து சபாநாயகருக்கு கடிதம்.
 
Tags :

Share via