சென்னையில் இன்று புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்துள்ளது

by Admin / 31-12-2025 11:02:26am
 சென்னையில் இன்று புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்துள்ளது

சென்னையில் வரும் 2026 புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக தமிழக காவல்துறை பல்வேறு முக்கிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக 18,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன ர். மெரினா பீச், பெசன்ட் நகர் பீச், எலியட் கடற்கரை சாலைகளின் நள்ளிரவு வாகன  போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்டறிய தீவிர சோதனைகள் நடத்தப்பட உள்ளன .விதிகளை மீறுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் அதிவேகமாக செல்வது மற்றும் பைக் ரேஸில் ஈடுபடுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்காக மேம்பாலங்கள் நள்ளிரவில் மூடப்படும் என்றும் ஓட்டல் மற்றும் கேளிக்கை விடுதிகளில் நள்ளிரவு ஒரு மணியுடன் கொண்டாட்டங்களை நிறுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி கடலில் இறங்கி குளிக்க அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Tags :

Share via

More stories