பிரதமர் நரேந்திர மோடி பொருளாதார நிபுணர்கள் மற்றும் துறைசார் வல்லுநர்களைச் சந்தித்து ஆலோசனைநடத்தினார்.
பிரதமர் நரேந்திர மோடி , புது தில்லி நிதி ஆயோக் அலுவலகத்தில் முன்னணி பொருளாதார நிபுணர்கள் மற்றும் துறைசார் வல்லுநர்களைச் சந்தித்து 2026-27 மத்திய பட்ஜெட்டிற்கு முன்னதாக ஆலோசனைநடத்தினார். பட்ஜெட்டில் சேர்க்கப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள் - நாட்டின் பொருளாதார முன்னுரிமைகள் குறித்து நிபுணர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தார்.
உற்பத்தி - சேவைத் துறைகளில் உற்பத்தித்திறனை மேம்படுத்துதல் ,உள்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் அதிநவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துதல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் ,நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெரி, தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர். சுப்பிரமணியம் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
2047-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான தொலைநோக்கு பார்வையுடன் பட்ஜெட் இருக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை மற்றும் சர்வதேச வர்த்தக சவால்களுக்கு மத்தியில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்படுகிறது.
2026-27-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி 1, 2026 அன்று தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது.
Tags :


















