2026  சட்டமன்ற தேர்தலில் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு டாக்டர் கிருஷ்ணசாமி. 

by Editor / 16-03-2025 12:25:02am
2026  சட்டமன்ற தேர்தலில் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு டாக்டர் கிருஷ்ணசாமி. 

2026  சட்டமன்ற தேர்தலில் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு கொடுக்கும் கட்சியுடன் தான் புதிய தமிழகம் கூட்டணி அமைக்கும்.புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் தெரிவித்ததாவது:


இன்று அறிவிக்கப்பட்ட வேளாண் பட்ஜெட் கலர் கலர் ரீல் விடுகிற பட்ஜெட் இது ஒரு காகித பட்ஜெட்‌.
அருந்ததியர் இட ஒதுக்கீடு சாதி வாரி கணக்கெடுப்பு போன்ற விஷயங்களை எந்த கட்சி கையில் எடுத்து போராட்டம் நடத்தினாலும் அதற்கு புதிய தமிழகம் ஆதரவு தெரிவிக்கவும்.

தொகுதி மறு வரை தொடர்பாக தமிழக உரிமை பாதிக்கப்படக்கூடிய வகையில் இருந்தால் புதிய தமிழகம் கட்சி முன்னிற்கும்.

தேசிய கல்விக் கொள்கை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும்.ஜெயலலிதா அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை எதிர்த்த நிலையில் எடப்பாடி அதனை ஆதரிக்கிறார்.ஒரு காலத்திலும் அருந்ததியர் ஓட்டை எடப்பாடி பழனிச்சாமி வாங்க முடியாது அது எம்ஜிஆர் காலத்துடன் முடிந்துவிட்டது. 

ஆட்சியில் பங்கு வேண்டும் என்றால் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக கூட்டணியில் இருந்து வெளிவர வேண்டும்.விடுதலை சிறுத்தை உடன் சேர்ந்து ஏற்கனவே நாங்கள் கூட்டணியில் இருந்திருக்கிறோம். மீண்டும் அது போன்ற ஒரு கூட்டணி இணைவது பற்றி எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியில் யார் பங்கு என்று சொல்கிறார்களோ அவர்களுடன் தான் கைகோர்ப்போம்

 

Tags : 2026  சட்டமன்ற தேர்தலில் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு டாக்டர் கிருஷ்ணசாமி. 

Share via