தமிழக காவல் துறைக்கு ஜனாதிபதி கொடி

by Editor / 31-07-2022 04:02:23pm
தமிழக காவல் துறைக்கு ஜனாதிபதி கொடி

சென்னை எழும்பூரில் ராஜரத்தினம் மைதானத்தில்  நடைபெற்ற நிகழ்வில், முதலமைச்சர் 
மு.க.ஸ்டாலினிடம் கொடியை ஒப்படைத்தார் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு
.அறிவிக்கப்பட்டு 13 ஆண்டுகள் கடந்த நிலையில், இன்று ஒப்படைக்கப்பட்டது.

நிகழ்வில் தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், முன்னாள், இந்நாள் காவல் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இவ்விழாவில் குடியரசுத் துணைத் தலைவருக்கு காவல் துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இவற்றை விருந்தினர்கள் கண்டு ரசித்தனர்.

டெல்லி உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கு பிறகு தமிழ்நாட்டுக்கு குடியரசுத் தலைவர் கொடி அளிக்கப்பட்டது.  இதன்மூலம், தென்னிந்தியாவில் ஜனாதிபதி கொடியைப் பெற்ற முதல் மாநிலம் என்ற பெருமையைப் பெற்றது.

உயர்ந்த அங்கீகாரத்தை தமிழக காவல் துறை பெற்றிருக்கிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

கொடி ஒப்படைக்கப்பட்ட நிலையில், வானத்தில் வண்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டன.

ராணுவம், காவல் துறைக்கு வழங்கப்படும் உயரிய கௌரவமே குடியரசுத் தலைவரின் கொடி.

இதுவரை 10 மாநிலங்களின் காவல்துறைக்கு மட்டுமே குடியரசு தலைவரின் கொடி வழங்கப்பட்டுள்ளது.

தென் மாநிலங்களில் முதல் மாநிலமாகவும், இந்தியாவில் 11-வது மாநிலமாகவும் தமிழ்நாட்டின் காவல்துறைக்கு குடியரசுத் தலைவரின் கொடி வழங்கப்பட்டுள்ளது,

சிறப்பான சட்டம் – ஒழுங்கு, குற்றங்கள் தடுப்பு உள்ளிட்ட பல அளவுகோலை அடிப்படையாகக் கொண்டு குடியரசுத் தலைவரின் கொடி வழங்கப்படுகிறது.
 

 

Tags :

Share via

More stories

Logo