மனித உரிமைக் குழுவில் இருந்து ரஷ்யாவை நீக்க இன்று வாக்கெடுப்பு
உக்ரேன் மீதான போர் நீடித்து வரும் நிலையில் ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் இருந்து ரஷ்யாவின் நீக்குவது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
உக்ரேன் நகரான பூச்சா ஏராளமான அப்பாவி மக்களை ரஷ்ய படையினர் கொன்று குவித்த தகவல் வெளியான நிலையில் ரஷ்யாவை மனித உரிமைக் குழுவில் இருந்து நீக்க வேண்டும் என்று மேற்கத்திய நாடுகளுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர் நாற்பத்தி ஏழு உறுப்பினர்களைக் கொண்ட ஐநா மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை நீக்குவது தொடர்பாக ஐநா பொது சபையில் இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது
இந்த வாக்கெடுப்பில் இந்தியா நடுநிலை வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது ரஷ்யாவுடன் நட்புறவு கொண்டிருக்கும் நிலையில் அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காமல் தவிர்க்கும் என்றும் கூறப்படுகிறது.
ரஷ்யாவை மனித உரிமை கவுன்சிலில் இருந்து நீக்கினால் அமைதி பேச்சுவார்த்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று நியூயார்க்கில் உள்ள ரஷ்யாவுக்கான தூதர் வாசன் கூறியுள்ளார் இதனிடையே ரஷ்யாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாக அதிபர் தெரிவித்துள்ளார்
Tags :