10 நாட்களுக்கு சென்னை வணிக வளாகங்கள் செயல்படத் தடை - மாநகராட்சி அதிரடி

by Editor / 31-07-2021 11:44:34am
10 நாட்களுக்கு   சென்னை வணிக வளாகங்கள் செயல்படத் தடை - மாநகராட்சி அதிரடி

கொரோனா வைரஸ் தொற்று சென்னையில் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு 9 முக்கியமான பகுதிகளில் 10 நாட்களுக்கு கடைகள் செயல்படசென்னை மாநகராட்சி. அனுமதி மறுத்து அறிவித்துள்ளது 


கோவிட் நோய் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில், ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஊரடங்கை, எவ்வித தளர்வுகளும் இன்றி 09.08.2021 வரை நீட்டித்து அறிவித்துள்ளது தமிழக அரசு. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக பின்பற்ற மாநகராட்சி ஆணையர் மற்றும் காவல்துறை ஆணையருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவின் அடிப்படையில் மக்கள் அதிகம் கூடும் இங்களில் உள்ள வணிக வளாகங்கள் அடுத்த 10 நாட்களுக்கு செயல்படத் தடை விதித்து அறிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட, ரங்கநாதன் தெரு சந்திப்பில் வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் ரயில் நிலையம் வரை, புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் ப்ரூக்லின் சாலை வரை, ஜாம் பசார் பாரதி சாலை ரத்னா கஃபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை, ஃபக்கி சாஹிப் தெரு, அபிபுல்லா தெரு, பிலிபோன் பஜார், என்.எஸ்.சி. போஸ் குறளகம் முதல் தங்கசாலை சந்திப்பு வரை, ராயபுரம் மார்கெட் பகுதியில் கல்மண்டபம் சாலை, வாட்டர் டேங்க் முதல் காமாட்சி அம்மன் கோவில் வரை, அமைந்தகரை மார்கெட் பகுதியில் பூந்தமல்லி நெடுஞ்சாலை அமைந்தகரை காவல் உதவி மையம் முதல் புல்லா அவென்யூ திரு.வி.க நகர் பூங்கா சந்திப்பு வரை மற்றும் ரெட்ஹில்ஸ் மார்க்கெட் பகுதியில் ஆஞ்சிநேயர் சிலை முதல் அம்பேத்கர் சிலை வரை உள்ள பகுதிகளில் செயல்பட்டு வரும் வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் இன்று (31/07/2021) முதல் 09/08/2021 வரை செயல்பட அனுமதி இல்லை என்று வணிக நிறுவனங்களுடன் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜீவால் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via