வாழை இலையில் தேசிய சின்ன ஓவியம் வரைந்த சாதனை மாணவர்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அரசர் குளம் மேற்குப் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் ஓவியராகவும், புகைப்படக் கலைஞராகவும் உள்ளார். இவரின் மகன் ஹரிராஜ் (17), சுப்பிரமணியபுரம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவயதிலிருந்தே ஓவியம் வரைவதில் அதீத ஆர்வம் கொண்ட இவர் பல்வேறு ஓவியங்களை வரைந்து வைத்துள்ளார். அப்துல்கலாம் உட்பட பல்வேறு தலைவர்களின் படங்களைத் தத்ரூபமாக வரைந்துள்ளார்.
இந்நிலையில்தான் சமீபத்தில் வாழை இலையில் இந்தியத் தேசிய சின்னத்தை வரைந்தார். அவர் வரைந்த அந்த ஓவியத்தை `இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்'' நிறுவனம் அங்கீகரித்து, இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் ஹரிராஜின் பெயரை இடம்பெற வைத்துள்ளது.
Tags :