டி.வி. விழுந்து 3 வயது குழந்தை பலி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள வளையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பூவரசன். இவரது மகன் மகியரசன் (3). சம்பவத்தன்று வீட்டில் உள்ள டி.வி.ஸ்டாண்டில் குழந்தை ஏற முயன்றுள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக டி.வி.சரிந்து மகியரசன் மீது விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த குழந்தை வலியால் அலறி துடித்தான். அக்கம் பக்கத்தினர், உடனே குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். இருப்பினும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான். இதையறிந்த குழந்தையின் உறவினர்கள் கதறி அழுதனர்.
Tags :