கணைய புற்றுநோய்க்கு தடுப்பூசி..
பத்தில் ஒன்பது பேர் கணைய புற்றுநோயிலிருந்து தப்பிப்பதில்லை. மேலும் 60 ஆண்டுகளாக உயிர்வாழும் விகிதம் மேம்படவில்லை. அதனால்தான் சிகிச்சையின் ஒவ்வொரு முன்னேற்றமும் ஒரு புரட்சியாக அறிவியலாளர்களால் பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் 16 கணைய புற்றுநோய் நோயாளிகளின் கட்டிகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிய பிறகு தனிப்பயனாக்கப்பட்ட mRNA தடுப்பூசி மூலம் சிகிச்சை அளித்தனர். 18 மாத சோதனைக் காலத்தின் முடிவில், பாதி நோயாளிகளுக்கு மீண்டும் நோய் வரவில்லை. அறுவைசிகிச்சைக்குப் பிறகு சில மாதங்களுக்குள் மீண்டும் வரும் புற்றுநோய்க்கு, இது மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. இது கூடிய விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.
Tags :