உஜ்ஜயினி கோவில் தீ விபத்தில் 13 பூசாரிகள் காயம்

உஜ்ஜயினியில் உள்ள மகாகாளேஸ்வரர் கோவிலின் கர்ப கிரகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பூசாரிகள் காயமடைந்தனர். மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினில் உள்ள மகாகாளேஸ்வரர் கோவிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஹோலி பண்டிகையின் போது, கோவிலினுள் பக்தர்கள் தரிசனம் செய்யும் போது பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பூசாரிகள் உள்பட 13 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை அப்பகுதி மக்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
Tags :