ஜப்பான் கண்டு பிடித்து அறிமுகப்படுத்தி உள்ள ஏ. ஐ .மூலம் மனிதர்களை குளிக்க வைக்கும் இயந்திரம்.

by Admin / 11-12-2024 05:22:51pm
ஜப்பான் கண்டு பிடித்து அறிமுகப்படுத்தி உள்ள  ஏ. ஐ .மூலம் மனிதர்களை குளிக்க வைக்கும் இயந்திரம்.

ஜப்பான் இப்பொழுது செயற்கை நுண்ணறிவு மூலம் அதாவது ஏ. ஐ .மூலம் மனிதர்களை குளிக்க வைக்கும் இயந்திரத்தை  கண்டுபிடித்து அறிமுகப்படுத்தி  உள்ளது. இவ் இயந்திரம் ஏ இமூலம் உடலின் உயிர் சக்திகளை கண்காணித்து நீரின் வெப்பநிலையை சரி செய்து பல் விலக்குவதில் இருந்து கால் பாதங்கள் வரை நம்முடைய உடல் தூய்மைப்படுத்துவதற்கு என்று வினோதமான இயந்திரத்தை அறிமுகப்படுத்தி சந்தைக்கு கொண்டு வர உள்ளது. இந்த இயந்திரம் உடலில் உள்ள வலிகளை நீக்கி பிசியோதெரபிஸ்ட் செய்யக் கூடிய வேலைகளையும் செய்வதோடு,உடலில் எங்கெல்லாம் தேவையற்ற அழுக்குகள் படிந்து இருக்கின்றதோ அவற்றையெல்லாம் அகற்றி விடக் கூடிய தன்மை கொண்டது.மொத்தத்தில்மனிதர்களைக்குளிப்பாட்டுவதற்கென்று வடிவமைக்கப்பட்டுள்ள அந்த இயந்திரத்திற்கு உள்ளே உட்கார்ந்து கொண்டால், நம் உடலை ஒரு குழந்தையை குளிப்பாட்டுவது போன்று  குளிப்பாட்டி விடும் என்பதுதான் ஆச்சரியம்.

ஜப்பான் கண்டு பிடித்து அறிமுகப்படுத்தி உள்ள  ஏ. ஐ .மூலம் மனிதர்களை குளிக்க வைக்கும் இயந்திரம்.
 
Tags :

Share via