விஷம் வைத்து கொல்லப்பட்ட 16 குரங்குகள்...வன ஆர்வலர்கள் அதிர்ச்சி...

by Admin / 29-09-2021 10:15:41pm
விஷம் வைத்து கொல்லப்பட்ட 16 குரங்குகள்...வன ஆர்வலர்கள் அதிர்ச்சி...


கர்நாடகாவில் 16 குரங்குகள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் வனவிலங்கு ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கர்நாடக மாநிலம் கோலாரில் சாலையோரமாக கிடந்த சாக்குப்பைகளில் 4 குட்டிகள் உட்பட 16 குரங்குகள் இறந்த நிலையில் கிடந்தன.

இறந்த குரங்குகள் பிரேத பரிசோதனைக்குப் பிறகு மதரஹள்ளி வனப்பகுதியில் இறுதி சடங்கு செய்யப்பட்டு, எரிக்கப்பட்டன.

மேலும், பிரேத பரிசோதனையில் விஷம் சாப்பிட்டதால் குரங்குகள் இறந்ததாக தெரிய வந்துள்ளது.
 
16 குரங்குகள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவம் வன ஆர்வலர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில், இதுக்குறித்து போலீசார் மற்றும் வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 

Tags :

Share via

More stories