கனமழையால் திணறும் கன்னியாகுமரி மாவட்டம்.;பள்ளிகளுக்கு விடுமுறை.

by Editor / 04-10-2023 08:40:53am
கனமழையால் திணறும் கன்னியாகுமரி மாவட்டம்.;பள்ளிகளுக்கு விடுமுறை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, இன்று (04.10.2023) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும்  விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சித்தலைவர்பி.என்.ஸ்ரீதர் உத்திரவிட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடல் பகுதியில் காற்றுடன் கனமழை விடிய விடிய பெய்யும் கனமழையால் மீன்பிடி தொழில் பாதிப்பு குளச்சல் முட்டம் தேங்காய்பட்டணம் துறைமுகங்களை சேர்ந்த 8-ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு 400-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லாத நிலையில் படகுகள் துறைமுகங்களிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் மழையால் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்வு,பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 57.85 அடியாக உயர்ந்தது. அணைக்கு 1564 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.அணையில் இருந்து 75 கன அடி தண்ணீர் வெளியேற்றப்ப டுகிறது.
 சிற்றார்-1 அணை நீர்மட்டம் 14.17 அடியாக உள்ளது. அணைக்கு 344 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யிலிருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப் படுகிறது. சிற்றார்-2 அணை நீர்மட்டம் 14.27 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 9.30 அடியாகவும், மாம் பழத்துறையாறு அணை நீர்மட்டம் 24.61 அடியாகவும் முக்கடல் அணை நீர்மட்டம்  10 அடியாகவும் உள்ளது.


 

 

Tags : கனமழையால் திணறும் கன்னியாகுமரி மாவட்டம்.;பள்ளிகளுக்கு விடுமுறை.

Share via