புலிகள் தாக்குதல்... ஒரு மாவட்டத்தில் 50 பேர் பலி
மகாராஷ்டிராவின் சந்திராபூர் மாவட்டத்தில் புலிகள் மக்களுக்கு பேராபத்தாக உள்ளன. புலிகள் தாக்கி மக்கள் கொல்லப்படுவது தொடர்கதையாகி வருகின்றது. இந்த ஆண்டு இதுவரை ஒரே மாவட்டத்தில் 50 பேரை புலிகள் தாக்கி கொன்றுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து மாநில வனத்துறை அமைச்சர் சுதிர் முங்கந்திவார் கவலை தெரிவித்தார். புலிகளின் பிடியில் இருந்து மக்களை காக்காவிட்டால் வனத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
Tags :