காதலியின் ஸ்கூட்டியை எரித்த காதலன்

by Staff / 16-12-2022 11:35:33am
காதலியின் ஸ்கூட்டியை எரித்த காதலன்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இளம்பெண்ணின் ஸ்கூட்டரை காதலன் தீ வைத்து எரித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.ஹலசூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் குற்றம் சாட்டப்பட்ட விக்ரமை மூன்று வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இருப்பினும், அவர் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார் என்பதை அறிந்து, காதலை கைவிட்டுள்ளார். ஆனால், விக்ரமிடம் எந்த மாற்றமும் ஏற்படாததால், அவர் போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து விக்ரமை போலீசார் கைது செய்தனர். 8 மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார். டிசம்பர் 12ஆம் தேதி, குற்றம் சாட்டப்பட்டவர் இளம் பெண்ணின் ஸ்கூட்டியை தீ வைத்து எரித்தார். இந்த நிலையில், குற்றவாளியை மீண்டும் போலீசார் கைது செய்தனர்.

 

Tags :

Share via

More stories