பாம்பு கடித்தும் உயிரிழந்த பாம்பு மனிதர்
ராஜஸ்தான் மாநிலம் ஷாரு மாவட்டத்தை சேர்ந்தவர் வினோத் திவாரி (வயது 45). இவர் கடந்த 20 ஆண்டுகளாக பாம்பு பிடிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார். தான் வசித்து வரும் பகுதிகளில் பிடிபடும் பாம்புகளை வினோத் அருகில் உள்ள வனப்பகுதியில் விடும் பழக்கத்தை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில், ஷாரு மாவட்டத்தின் கொஹமெடி பகுதியில் உள்ள ஒரு கடைக்குள் பாம்பு புகுந்ததாக வினோத் திவாரி தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதிக்கு வந்த வினோத் கடைக்குள் புகுந்திருந்த கோப்ரா வகை பாம்பை பிடித்து தான் கொண்டுவந்த பைக்குள் அடைக்க முயற்சித்துள்ளார். பாம்பை பைக்குள் அடைக்க முயற்சித்தபோது எதிர்பாராத விதமாக வினோத்தை பாம்பு கடித்தது. வினோத்தின் கையில் விஷம் நிறைந்த அந்த கோப்ரா பாம்பு கடித்தது. இதனால், அங்கிருந்து சென்ற மருத்துவமனைக்கு செல்ல வினோத் நடந்து சென்றுள்ளார். ஆனால், பாம்பு கடித்த சில நிமிடங்களிலேயே வினோத் பரிதாபமாக உயிரிழந்தார்.
Tags :