அமெரிக்காவில் 2.36 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்

by Staff / 08-04-2023 11:39:55am
அமெரிக்காவில் 2.36 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்

அமெரிக்க நிறுவனங்கள் மார்ச் மாதத்தில் 2,36,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு முதல் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி 9 முறை வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில், அந்நாட்டின் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. இருப்பினும், மார்ச் மாதத்தில் வேலையின்மை விகிதம் 3.5 சதவீதமாக பதிவாகியுள்ளது. பிப்ரவரியில் 3,26,000 வேலை வாய்ப்புகள் இருந்தது. இதனுடன் ஒப்பிடுகையில், மார்ச் மாதத்தில் சற்று குறைந்துள்ளது. பிப்ரவரியில் சராசரியாக ஒரு மணி நேர ஊதியம் 4.6 சதவீதம் இருந்தது, அது மார்ச் மாதத்தில் 4.2 சதவீதமாக உள்ளது.

 

Tags :

Share via

More stories