நா.முத்துக்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு இசை நிகழ்ச்சி

by Editor / 27-05-2025 03:22:43pm
நா.முத்துக்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு இசை நிகழ்ச்சி

தமிழ் சினிமாவின் பிரபல பாடலாசிரியரான நா. முத்துக்குமாரின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு, வரும் ஜூலை 5-ம் தேதி சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. நா. முத்துகுமார் வெல்ஃபேர் கோர் கமிட்டி, ACTC நிறுவனம் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றன. 2016-ம் ஆண்டு மறைந்த நா. முத்துக்குமார், 2 தேசிய விருதுகள், 4 ஃப்லிம்பேர் விருதுகளை வென்றவர். அவரது பாடல் வரிகள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via