துப்பாக்கியால் சுட்டு தொழிலதிபர் மகன் தற்கொலை
சென்னையில் தொழிலதிபரின் மகன் கைத்துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த பிரகலாத் நரசிம்மன் (32) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். பிரகலாத், மனநலம் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையை எடுத்து வந்தது தெரியவந்துள்ளது. தற்கொலை சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :



















