எம்பி பதவி வேண்டாம் - அன்புமணி உறுதி?

by Editor / 27-05-2025 02:49:09pm
எம்பி பதவி வேண்டாம் - அன்புமணி உறுதி?

தனக்கு எம்பி பதவி வேண்டாம் என்பதில் பாமக தலைவர் அன்புமணி உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க மாநில அரசியலே முக்கியம் என்பதில் அன்புமணி திட்டவட்டமாக இருப்பதாகவும், மாநில அரசியலில் பங்கெடுத்து அமைச்சரவையில் இடம் பெறுவதே பாமகவின் இலக்காக வைத்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. இது ஒருபுறம் இருக்க இந்த முறை அன்புமணிக்காக ராஜ்யசபா சீட் கேட்க வேண்டாம் என பாமக நிறுவனர் ராமதாஸ் எண்ணுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via